சனி

மூலஸ்தான முரண்பாடுகள்!

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலின் பின்புறம் இருக்கும் மடவிளக்குத்தெரு. அந்த வீட்டில் 65 வயது மூதாட்டி இறந்துபோக... தகவல் அறிந்ததும் பரபரவென பசுபதீஸ்வரர் கோயிலின் கதவுகளை மூடினர் குருக்கள்கள்.

இதைக் கண்ட சிவனடியார்கள் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோயில் முன் திரண்டு..’’""கடவுளை எக்காரணத்தை முன்னிட்டும் பூட்டிவைக்கக் கூடாது. மரணத்தின் மூலம் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என குருக்கள்கள் கருதினால்... பரிகார பூஜைகளை பண்ணட்டுமே''’என்றனர் கோரஸாய். இதை குருக்கள்கள் ஏற்காத தால் பரபரப்பு பற்றிக்கொண்டது. காவல்துறையினர் ஓடிவந்தனர். துக்க வீட்டுக்குச் சென்று... மூதாட்டியின் சடலத்தை உடனடியாக அடக்கம் பண்ண வற்புறுத்தினர்.

"இது அநியாயம்' என கொந்தளிக்கும்... மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அம்பேத்கர் “""ஆச்சாரம் என்ற பெயரில் கொடுமையை நிகழ்த்தியிருக்கிறார்கள். கோயிலுக்கு பின்புற வீட்டில் இறப்பு நடந்ததால்... உறவினர்கள் வருவதற்குள் இறந்தவரை அடக்கம் செய்யவைத்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல். ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை இழிவு படுத்துவதும் தள்ளிவைப்பதும் காக்கவைப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்களில் கூட தேவையில்லாத கட்டுப்பாடுகளை குருக்கள்களே விதிப்பது கொடுமையானது. அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆனபிறகும்... தங்களைத் தவிர மற்றவர்களை கருவறைக்குள் நுழையக்கூடாது என்று தடைபோடு கிறார்கள். பொதுவா கோயில்களை குருக்கள்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு... பக்தர்களின் கையில் கொடுத்தால்தான்... உண்மையான ஆன்மீகமும் பக்தியும் தழைக்கும்''’என்கிறார் அதிரடியாக.

இதுபற்றி விழுப்புரம் வேதபாடசாலை குருவான சீனிவாச சாஸ்திரிகளிடம் நாம் கேட்டபோது ""கருவறை என்பது காலகாலமாக சுத்த மாக பராமரிக்கப்பட்டு வரு கிறது. ஆன்மசுத்தம் கொண்டவர்களால் தான் அதைப் பராமரிக்க முடியும். அதனால் அங்கு மற்றவர்களை அனுமதிப்பதில்லை. எங்கள் செயல்பாடுகள் எல்லாமே ஆகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டதுதான்''’என்கிறார் நிதானமாக.

நெய்வேலி பட்டதாரி இளைஞரான திருநாவுக்கரசோ ""பக் தர்களான நாங்கள் மட்டும் அசுத்தமான எண்ணத்தோட... அழுக் கான உடலோட கோயிலுக்குப் போகிறோமா? ஆத்மசுத்தம் என் பது அந்த ஒருசாதிக்கு மட்டுமான விஷயமா என்ன? மதியத்தில் கோயிலை இவங்க இஷ்டத்துக்கு சாத்தறாங்க. கேட்டா ஆகமம்னு சொல்றாங்க. ஆனா திருப்பதி, பழனி கோயில்களை மதியநேரத்திலும் மூடாம திறந்து வச்சிருக்காங்களே.... அப்படின்னா அங்க ஆச்சாரத்தை மீறுறாங்கன்னு அர்த்தமா? இவங்க கோயிலை மூடினாலும் ஆச்சாரம், திறந்தாலும் ஆச்சாரம். இவங்க கோயிலை அசிங்கப்படுத்தினாலும் ஆச்சாரம் எப்படியெல்லாம் வேடிக்கை பண்றாங்க பாருங்க''’என்கிறார்.

இவரின் வாதத்தை நெய்வேலி கார்த்திகேய குருக்களிடம் நாம் வைத்தபோது... "" “கர்ப்பகிருகத்தில் மற்றவர்கள் நுழைவது முறையல்ல. ஒரு வீட்டில் உள்ள பீரோ சாவி யாரிடம் இருக்கும். வீட்டின் முதன்மையானவரிடமும் மரியாதைக்குரியவரிடமும்தான் இருக்கும். அதேபோல் கோயிலில் குருக்கள்கள்தான் முதன்மையானவர்கள்'' என்கிறார் ஒரே போடாக. புகைப்படக் கலைஞரான விருத்தாசலம் முருகனோ, ""கோயில்ல குருக்கள்தான் முதன்மையானவர் என்பதே திமிர்வாதம். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே எதற்கு இந்த இடைத்தரகர்கள்? எங்க பழமலைநாதர் கோயிலில் சமீபத்தில் அன்னதானம் நடந்தது. அதைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது குருக்கள்கள் ஓடிவந்து... ""மூலவரைப் படம் எடுக்கக்கூடாது. எடுத்தால் கடவுளோட சக்தி குறைஞ்சிடும்னு தடுத்துட்டாங்க. படம் எடுத்தா பவர் குறையும்னா... அப்ப கடவுளைவிட கேமராவுக்கு அதிக பவரா? ஆனால்... சில கோயில்களின் மூலவரை அவங்களே புகைப்படமா எடுத்து விற்பனை பண்றாங்களே அது எப்படி?''’ என்கிறார் சூடாக.

சிதம்பரம் தமிழ்க்காப்பாளினி இயக்கத் துணைத் தலைவர் சிவப்பிரகாசமோ ""மூலவரைப் படம் எடுக்கக்கூடாது...மதியத்தில் நடையை சாத்தணும்னு எல்லாம் எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கு? இதை யாராவது நிரூபிக்க முடியுமா?''’என்கிறார் காட்டமாக. சிதம்பரம் கோயில் தீட்சிதர்களான உமாநாத்தும் வெங்கடேசனும் ""ஒவ்வொரு கோயிலுக்கும் சில கண்டிப்பான கட்டுப்பாடுகள் இருக்கு. இதை மீறும்போது விபரீதங்கள் நடக்கும்'' என்கிறார்கள் கூலாக.

ஆன்மீகவாதியான திட்டக்குடி சின்னதுரையோ ""குருக் கள்கள் சிலர் பான்பராக் மென்றபடி அர்ச்சனை பண்றதை பார்த்தாலும் கோபம் வருது. காஞ்சிபுரக் குருக்கள் தேவ நாதன் கருவறையிலேயே பெண்களிடம் சல்லாபிச்சி படம் எடுத்தானே... அவனையெல்லாம் எப்படி குருக்கள்னு ஒத்துக்கமுடி யும்? குருக்கள்களையும் கண்காணிக்கணும்''’என்கிறார் கோபமாய்.

ஆகமம் என்ற பெயரில் அவர்களாக உருவாக்கிக்கொண்ட கட்டுப்பாடுகள்தான்... அரசின் வசமுள்ள கோயில்களிலும் கடைபிடிக்கப்படுகிறது என்றால்...அந்தக் கட்டுப்பாடு களைத் தகர்த்தெறியவேண்டியதும் அவசர அவசியம்தான்.

-எஸ்.பி.சேகர்
நக்கீரன்-07-01-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக