சனி

தேவநாதன் -கருவறையில் பெண்களின் ரகசிய வாக்கு மூலம்

காஞ்சி மன்மத குருக்கள் தேவ நாதன் வழக்கில் ஒரு அதிரடி  திருப்பமாகபாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் நீதிபதி முன்பாக ஆஜராகி பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

தேவநாதனால் மொத்தம் பதினெட்டுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டார்கள்என்றா லும் நான்கு பெண்களை மட்டு மே அவன் அர்ச்சகராக இருந்த மச்சேசுவரபெருமான் கோயிலின் கருவறைக்குள்ளேயே வைத்து களி யாட்டங்கள்நடத்தியிருக்கிறான்.

அதில் முதலாவது பெண் பூக்காரி கலா, அடுத்து லெக்சரரின் மனைவி தாரா,மூன்றாவது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் அபிதா, நான்காவது வீட்டு வேலைசெய்யும் பெண்ணான வள்ளி.

பூக்காரியான கலாவின் வாக்குமூலத்தில் தேவநாதன் எப்படியெல்லாம் பெண்களைவசியம் செய்வான் என வர்ணித்திருக்கிறார். ""சாராயம், சிகரெட் மற்றும்ஹன்ஸ் என்கிற புகையிலை போடும் பழக்கம் உடையவன் தேவநாதன். எப்பொழுதும்இடுப் பில் கட்டுகட்டாக பணமும் வைத்திருப் பான்.

ஆண்டவனுக்கு பூஜை செய்யும்போது சிவலிங்கத்தின் மறுபுறத் தை ஒரு பார் ஆக மாற்றி பீரையும், பிராந்தியையும் சாப்பிடுவான்.

"பீருடன் ஹன்ஸ் என்கிற புகையிலையை மெல்லும்போது தான் எனக்கு காமவெறிஉச்சத் திற்கு வரும். அந்த அரைமணி நேரத்திற்குள் எனக்கு ஒரு பெண் கிடைக்கவேண்டும்' என அடிக்கடி கூறுவான்.

அதே ஹன்ஸ் என்கிற புகை யிலையை விதவிதமாக பயன்படுத்திதான் பெண்களையும்வசியம் செய்வான். கோயிலுக்கு வரும் பெண்களிடம் அந்த புகையிலையை கரைத்துதீர்த்தம் தருவான்.

எனக்கு அப்படி கொடுத்தபோது நான் மயங்கி விழுந்தேன். என்னை கருவறைக்குள் தரதரவென மயங்கிய நிலையிலேயே அழைத்துச் சென்று கற்பழித்தான்.

நான் விழித்து பார்த்தபொழுது ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தேன். அப்பொழுதுஎன்னி டம் "மன்னித்துக் கொள். ஆண்டவன் சன்னிதியில் உறவு வைத்தால்புண்ணியம்' என காலில் விழுந்து கதறி னான்.

ஆனால் அடுத்த நாளே அவன் என்னுடன் கருவறையில் உறவு கொண்டதை படமாக செல்போனில் ஓடவிட்டு காட்டி என்னை மிரட்ட ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் என்னை பாதுகாவலுக்கு நிற்க வைத்துவிட்டு மற்ற பெண்களுடன் கருவறையில் உறவு கொள்வான்.

மற்ற பெண்களை எப்படி மடக்கினாய் என அவனிடம் கேட்கும்போது "குளிர்பானத்தில் ஹன்ஸ் புகையிலை கரைசலை கலந்து மயக்கினேன். சர்க்கரை பொங்கலில் கலந்துமயக்கினேன். ஹன்ஸ் புகையிலையை ஒரு மாத்திரை வடிவத்தில் உருட்டி இதைபோட்டுக் கொண்டால் ஜலதோஷம் தலைவலியெல்லாம் வராது என கொடுத்து மயக்கினேன்'என்றெல்லாம் கூறுவான்.

கருவறையில் ஏன் செக்ஸ் வைத்துக் கொள்கிறாய் அது பாவமல்லவா என கேட்டதற்கு,"கருவறையில் செக்ஸ் என்றால்தான் தனக்கு ஒரு கிக்' என தெரி வித்தான்.ஒருநாள் அவனில்லாத சமயத்தில் அவனது நண்பர்கள் பலர் வந்து அந்த கருவறையில்மின்சார வேலைகள் செய்வதை பார்த்தேன்.

கருவறையில் அவன் செக்சில் ஈடுபடுவதை படம்பிடிக்க ரகசிய கேமராக்களை பிக்ஸ்செய்து, அவனது நண்பர்கள் மூலம் படம் பிடிக்கிறான் என நான்கண்டுபிடித்தேன்.

அவனிடம் என்னை கூட அப்படித்தான் படம் பிடித்தாயா? இந்த படங்களை விற்றுபணம் சம்பாதிக்கப் போகிறாயா? என கேட்டபோது, "உன் படம் மட்டும் வெளியேபோகாது' என வாக்குறுதி கொடுத்தான்.

கடைசியில் கருவறையில் செக்ஸ் என இன்டர் நெட்டில் வெளியான படங்களில் மூன்றுநான்கு இடத்தில் நான் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந் தேன்'' எனபூக்காரி வாக்குமூலம் தந்திருக்கிறார்.

"லெக்சரர் மனைவியான தாரா, அபிதா, வள்ளி ஆகியோரும் இந்த ஹன்ஸ் புகையிலைகதையையும் கருவறை செக்ஸையும் வாக்குமூலமாக சொன்னார்கள் என்றாலும் கலாவின்வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் போலீஸ் அடுத்த ஸ்டெப்பிற்கு போகும்'என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

தேவநாதன் தனியாக இந்த பாவச் செயலில் ஈடுபடவில்லை. சாதாரண செல்போன்கேமராவில் லீலைகளை படம் பிடிக்கவில்லை. அவனுடன் சேர்ந்து எலக்ட்ரானிக்தொழில் தெரிந்த செந்தில், பாலாஜி மற்றும் சச்சின் கம்ப்யூட்டர்ஸ் என்கிறநிறுவன உரிமையாளர் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.

கருவறையில் செக்ஸ் என்பதையே மூலதனமாக்கி ஒரு பெரிய வியாபாரத்தை செய்துள்ளனர் என்கிற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

செந்தில், பாலாஜி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றிருப்பதும் தடயவியல் சோதனைக்காகஅனுப்பப்பட்ட அவர்களது லேப்டாப் விசாரணை இன்னமும் முடி யாததுதான்போலீசாருக்கு உள்ள இடர்ப்பாடுகள் என்கிறார்கள்.

-பிரகாஷ் நக்கீரன்-28.01.2010

சிறைக்கு போவாரா ஜெயந்திரர்

இந்தியாவின் பார்வையை ஒட்டுமொத்தமாகத் தமிழகம் பக்கம் திருப்பிய அந்த கைது நடவடிக்கையை மறக்க முடியாது. 2004ஆம் ஆண்டு தீபாவளி இரவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். வரதராஜபெருமாள் கோவில் ஊழியர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில்தான் அவரை ஹைதராபாத்திலிருந்து கைது செய்து அழைத்து வந்தது எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான டீம்.

சங்கரராமன் கொலை வழக்கை பல வழிகளிலும் ஜெயேந்திரர் தரப்பு இழுத்தடிக்க.. நீண்ட போராட்டத்திற்குப்பிறகு இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகள் ஒவ்வொருவ ராக பல்டி அடித்துவந்த நிலையில், ஜனவரி 21-ந் தேதி அப்ரூவர் ரவி சுப்ரமணியன் சாட்சியமளிக்க வருகிறார் என்றதும் கோர்ட் வளாகம் பரபரப்பாக இருந்தது.

கைது செய்யப்பட்டபோது ரவி சுப்ரமணியன் கொடுத்திருந்த 164 வாக்குமூலத்தில், ""அப்புவுக்கு சொந்தமான ஃபோர்டு ஐகான் காரில் கதிரவன், நான், ரஜினிஜிந்தா மற்றொருவர் ஆகியோர் போய் சங்கரராமன் இருப்பிடத்தை அடையாளம் காட்டினோம் . பெரியவரை தனி அறையில் சந்தித்தேன். 5 லட்சம் பணம் கொடுத்து அப்புவிடம் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன். சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்'' என்று தெரிவித்திருந்தார். அவர் இப்போது நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையை எதிர்கொள்கிறார் என்பதால் அனைத்து மட்டங்களிலும் எதிர்பார்ப்பு மிகுந் திருந்தது. நாமும் புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்தோம்.

ஜெயேந்திரர் கேரளாவில் இருந்தார். விஜயேந்திரரோ நீதிபதி அறைக்கு செல்லும் வழியில் பீரோவுக்கிடையே சந்தில் சேர் போட்டுக்கொண்டு போலீசாருக்கும் கோர்ட் ஊழியர்களுக்கும் ஆசி வழங்கி, குங்குமம் வைத்து விட்டுக்கொண்டிருந்தார். நாம் அங்கே சென்றதும் நமக்கும் குங்குமம் வைக்க முயன்றார். நாம் சற்று விலகியதும், ஒரு துண்டு பேப்பரில் குங்குமத்தை மடித்துக்கொடுத்தார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த நடுத்தர வயது பெண் பக்தர், "சுவாமி.. இவா நக்கீரன்' என்றதும் விஜயேந்திரர் சட்டென எழுந்து நின்றுவிட்டார். படபடப்பும் வியர்வையுமாக விழிபிதுங்கி நின்றவர், அசட்டு சிரிப்பு சிரித்தார். அப்போது அவரது செல்போன் சிணுங்க, கேரளாவிலிருந்து ஜெயேந்திரர் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காலை 10.30 மணிக்கு கூண்டில் ஏறிய அப்ரூவர் ரவி சுப்ரமணியன், கையோடு வாட்டர் பாட்டிலையும் வைத்திருந்தார். 20 நிமிடத்திற்கொரு முறை தண்ணீர் குடித்துக்கொண்டே குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், "நீதிபதி முன் நீங்கள் சுயமாகத்தான் 164 வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள்' என்றபடி, சங்கர ராமன் கொலையையும், அடையாளம் காட்டுவதற்காக காரில் சென்ற சம்பவத் தையும் பற்றி கேட்க, "எனக்கு தெரியாது. ஞாபகம் இல்லை' என்று ரவி சுப்ரமணியன் சொன்னதும் பலருக்கும் அதிர்ச்சி. அப்போது ஜெயேந்திரர் வழக் கறிஞர் குறுக்கிட்டு, "முந்தைய ஆட்சியின் மிரட்டலுக்குப் பயந்தும், மனைவி-பிள்ளைகளை நினைத்தும் போலீஸ் சொல்லி கொடுத்தது போல வாக்குமூலம் கொடுத்துள்ளீர்களா?' என்று கேட்க, "ஆமாம்.. ஆமாம்' என்றார் ரவிசுப்ரமணியன். பழைய நக்கீரன் இதழை எடுத்து, ரவிசுப்ரமணியன் தற்கொலை? தேடப்படும் அப்பு பேட்டி என்ற செய்தி யைக்காட்டி, ""உங்களை கொலைசெய்து விட்டு, தற்கொலை என்று சொல்லி விடுவோமென போலீஸ் மிரட்டியுள்ளது. அதற்குப் பயந்துதான் பொய்யான வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்'' என்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டதும், "ஆமாம்' என்றார் ரவிசுப்ர மணியன்.

அவர் விசாரிக்கப்பட்டுக்கொண் டிருந்த நேரத்தில், விஜயேந்திரர் பக்கத் தில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள், ""ரவி எல்லாத்தையும் மாத்தி சொல் லிட்டான். சந்தோஷமா இருக்கு'' என்றனர் கிசுகிசுப்பாக. ரவி சுப்ரமணியத்தின் வாக்குமூலத்தை பிறழ்சாட்சி (பல்டி யடித்தவர்) என புதுவை நீதிமன்றம் பதிவு செய்தது. அவர் சந் தோஷத்துடன் வெளியே வர, எதிர்த்தரப்பும் சந்தோஷ மாக இருந்தது. செப்டம்பர் மாதம் குறுக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து, சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமாமகேஸ்வரி, மேனேஜர் கணேஷ், துரைக்கண்ணு, சங்கர மட ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்க ளின் முந்தைய வாக்குமூலத்திலிருந்து மாறுபட்டே சாட்சியம் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸிடம் நாம் கேட்டபோது, ""மொத்தம் 370 சாட்சிகள். அதில் 50 சாட்சிகளை முதலில் தேர்வு செய்து, அதிலும் 10 சாட்சிகளை ஒதுக்கிவிட்டு 40 சாட்சிகளை விசாரணைக்கு கொண்டுவந்தோம். 20 சாட்சிகள் பல்டியடித்துவிட்டார்கள். மீதி சாட்சிகள் அரசு தரப்புக்கு சாதகமாக உள்ளனர் . குறுக்கு விசாரணையில் சிலர் பல்டி அடித்தாலும், ஆர்கியூமெண்ட் நடக்கும்போது கேஸை நல்லா நடத்தலாம். அப்ரூவர் ரவி சுப்ரமணியன் விவரம் தெரிந்தவர்.

கொலைக்கான பணம் செட்டில் மென்ட்டான பிறகு அவர் விமானத்தில் மும்பை சென்றதற்கும் அங்கு தங்கியதற்குமான ஆதாரங்கள் இருக்கிறது. திருச்சி லாட்ஜில் தங்கியதற்கான ஆதாரமும் உள்ளது. ரவிசுப்ரமணியன் செல்போனிலிருந்து அப்பு செல்லுக்குப் பேசியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. வீடியோ-ஆடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த வழக்கை வலுவாக நடத்த முடியும்'' என்றார்.

அப்ரூவர் ரவி சுப்ரமணியனுக்கு ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கை. அவரே ஜோதிடமும் பார்க்கக்கூடியவர். நக்கீரனிடம் முன்பு அவர் பேசிய போது, ஜெயேந்திரர் ஜாதகப்படி அவர் நீண்டகாலம் ஜெயிலில் இருப்பார் என்று சொல்லி யிருந்தார். வழக்கின் போக்கு எப்படி இருக்கப் போகிறது?

இதுதான் நியாயத் தின்மீது நம்பிக்கை உள்ளவர்களின் கேள்வி.

-காசி
நக்கீரன்-24-01-2010

மூலஸ்தான முரண்பாடுகள்!

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலின் பின்புறம் இருக்கும் மடவிளக்குத்தெரு. அந்த வீட்டில் 65 வயது மூதாட்டி இறந்துபோக... தகவல் அறிந்ததும் பரபரவென பசுபதீஸ்வரர் கோயிலின் கதவுகளை மூடினர் குருக்கள்கள்.

இதைக் கண்ட சிவனடியார்கள் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோயில் முன் திரண்டு..’’""கடவுளை எக்காரணத்தை முன்னிட்டும் பூட்டிவைக்கக் கூடாது. மரணத்தின் மூலம் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என குருக்கள்கள் கருதினால்... பரிகார பூஜைகளை பண்ணட்டுமே''’என்றனர் கோரஸாய். இதை குருக்கள்கள் ஏற்காத தால் பரபரப்பு பற்றிக்கொண்டது. காவல்துறையினர் ஓடிவந்தனர். துக்க வீட்டுக்குச் சென்று... மூதாட்டியின் சடலத்தை உடனடியாக அடக்கம் பண்ண வற்புறுத்தினர்.

"இது அநியாயம்' என கொந்தளிக்கும்... மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அம்பேத்கர் “""ஆச்சாரம் என்ற பெயரில் கொடுமையை நிகழ்த்தியிருக்கிறார்கள். கோயிலுக்கு பின்புற வீட்டில் இறப்பு நடந்ததால்... உறவினர்கள் வருவதற்குள் இறந்தவரை அடக்கம் செய்யவைத்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல். ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை இழிவு படுத்துவதும் தள்ளிவைப்பதும் காக்கவைப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்களில் கூட தேவையில்லாத கட்டுப்பாடுகளை குருக்கள்களே விதிப்பது கொடுமையானது. அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆனபிறகும்... தங்களைத் தவிர மற்றவர்களை கருவறைக்குள் நுழையக்கூடாது என்று தடைபோடு கிறார்கள். பொதுவா கோயில்களை குருக்கள்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு... பக்தர்களின் கையில் கொடுத்தால்தான்... உண்மையான ஆன்மீகமும் பக்தியும் தழைக்கும்''’என்கிறார் அதிரடியாக.

இதுபற்றி விழுப்புரம் வேதபாடசாலை குருவான சீனிவாச சாஸ்திரிகளிடம் நாம் கேட்டபோது ""கருவறை என்பது காலகாலமாக சுத்த மாக பராமரிக்கப்பட்டு வரு கிறது. ஆன்மசுத்தம் கொண்டவர்களால் தான் அதைப் பராமரிக்க முடியும். அதனால் அங்கு மற்றவர்களை அனுமதிப்பதில்லை. எங்கள் செயல்பாடுகள் எல்லாமே ஆகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டதுதான்''’என்கிறார் நிதானமாக.

நெய்வேலி பட்டதாரி இளைஞரான திருநாவுக்கரசோ ""பக் தர்களான நாங்கள் மட்டும் அசுத்தமான எண்ணத்தோட... அழுக் கான உடலோட கோயிலுக்குப் போகிறோமா? ஆத்மசுத்தம் என் பது அந்த ஒருசாதிக்கு மட்டுமான விஷயமா என்ன? மதியத்தில் கோயிலை இவங்க இஷ்டத்துக்கு சாத்தறாங்க. கேட்டா ஆகமம்னு சொல்றாங்க. ஆனா திருப்பதி, பழனி கோயில்களை மதியநேரத்திலும் மூடாம திறந்து வச்சிருக்காங்களே.... அப்படின்னா அங்க ஆச்சாரத்தை மீறுறாங்கன்னு அர்த்தமா? இவங்க கோயிலை மூடினாலும் ஆச்சாரம், திறந்தாலும் ஆச்சாரம். இவங்க கோயிலை அசிங்கப்படுத்தினாலும் ஆச்சாரம் எப்படியெல்லாம் வேடிக்கை பண்றாங்க பாருங்க''’என்கிறார்.

இவரின் வாதத்தை நெய்வேலி கார்த்திகேய குருக்களிடம் நாம் வைத்தபோது... "" “கர்ப்பகிருகத்தில் மற்றவர்கள் நுழைவது முறையல்ல. ஒரு வீட்டில் உள்ள பீரோ சாவி யாரிடம் இருக்கும். வீட்டின் முதன்மையானவரிடமும் மரியாதைக்குரியவரிடமும்தான் இருக்கும். அதேபோல் கோயிலில் குருக்கள்கள்தான் முதன்மையானவர்கள்'' என்கிறார் ஒரே போடாக. புகைப்படக் கலைஞரான விருத்தாசலம் முருகனோ, ""கோயில்ல குருக்கள்தான் முதன்மையானவர் என்பதே திமிர்வாதம். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே எதற்கு இந்த இடைத்தரகர்கள்? எங்க பழமலைநாதர் கோயிலில் சமீபத்தில் அன்னதானம் நடந்தது. அதைப் புகைப்படம் எடுக்க முயன்றபோது குருக்கள்கள் ஓடிவந்து... ""மூலவரைப் படம் எடுக்கக்கூடாது. எடுத்தால் கடவுளோட சக்தி குறைஞ்சிடும்னு தடுத்துட்டாங்க. படம் எடுத்தா பவர் குறையும்னா... அப்ப கடவுளைவிட கேமராவுக்கு அதிக பவரா? ஆனால்... சில கோயில்களின் மூலவரை அவங்களே புகைப்படமா எடுத்து விற்பனை பண்றாங்களே அது எப்படி?''’ என்கிறார் சூடாக.

சிதம்பரம் தமிழ்க்காப்பாளினி இயக்கத் துணைத் தலைவர் சிவப்பிரகாசமோ ""மூலவரைப் படம் எடுக்கக்கூடாது...மதியத்தில் நடையை சாத்தணும்னு எல்லாம் எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கு? இதை யாராவது நிரூபிக்க முடியுமா?''’என்கிறார் காட்டமாக. சிதம்பரம் கோயில் தீட்சிதர்களான உமாநாத்தும் வெங்கடேசனும் ""ஒவ்வொரு கோயிலுக்கும் சில கண்டிப்பான கட்டுப்பாடுகள் இருக்கு. இதை மீறும்போது விபரீதங்கள் நடக்கும்'' என்கிறார்கள் கூலாக.

ஆன்மீகவாதியான திட்டக்குடி சின்னதுரையோ ""குருக் கள்கள் சிலர் பான்பராக் மென்றபடி அர்ச்சனை பண்றதை பார்த்தாலும் கோபம் வருது. காஞ்சிபுரக் குருக்கள் தேவ நாதன் கருவறையிலேயே பெண்களிடம் சல்லாபிச்சி படம் எடுத்தானே... அவனையெல்லாம் எப்படி குருக்கள்னு ஒத்துக்கமுடி யும்? குருக்கள்களையும் கண்காணிக்கணும்''’என்கிறார் கோபமாய்.

ஆகமம் என்ற பெயரில் அவர்களாக உருவாக்கிக்கொண்ட கட்டுப்பாடுகள்தான்... அரசின் வசமுள்ள கோயில்களிலும் கடைபிடிக்கப்படுகிறது என்றால்...அந்தக் கட்டுப்பாடு களைத் தகர்த்தெறியவேண்டியதும் அவசர அவசியம்தான்.

-எஸ்.பி.சேகர்
நக்கீரன்-07-01-2010

கேமராவில் இளம்பெண்களுடன் திவாரி சிக்கியது எப்படி?



"எரியும் ஆந்திரா! இளம்பெண்ணுடன் கவர்னர் உல்லாசம்! -லைவ் ரிலே' என்ற தலைப்பில் 85 வயதான ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி அடித்த மன்மதக் கூத்துக்களையும்... அது அவரால் பாதிக்கப்பட்ட ராதிகா என்ற பெண்ணாலேயே படம்பிடிக்கப்பட்டு... அது ஏ.பி.என். தொலைக்காட்சியில் ரிலே ஆகி ஆந்திராவை பரபரப் பாகியதையும் நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாகக் கொடுத்திருந்தோம். அதிலேயே திவாரியை கவர்னர் பதவியில் இருந்து தூக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்த தகவலையும் வெளியிட்டிருந்தோம்.

நமது இதழ் கடைக்கு வந்த அன்றே டெல்லி மேலிடம் நாம் சொன்னவாறு திவாரியை கவர்னர் பதவியில் இருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது. அவருக்கு பதில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நரசிம்மன் கவர்னர் நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறார். அந்த ஆபாச சி.டி.யில் ராதிகாவோடு மேலும் மேலும் மூன்று பெண்களிடம் கவர்னர் திவாரி கிளுகிளு லீலைகளில் ஈடுபட்டதும் தற்போது பகிரங்கமாகியிருக்கிறது. நாம் அந்த பலான சி.டி.யில் கவர்னரோடு இருந்த ராதிகா உள்ளிட்ட நான்கு பெண்களையும் தீவிர தேடலுக்குப்பிறகு கண்டுபிடித்தோம்.

கவர்னர் பதவியைப் பறிகொடுத்திருக்கும் திவாரியின் ஆட்களால்... தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற மிரட்சியில் இருந்த அந்தப் பெண் கள் நம்மிடம் முழுதாக மனம் திறந் தார்கள்.

முதலில் கவர்னருடன் புரிந்த லீலைகளை தைரியமாகப் படம்பிடித்த ராதிகா நம்மிடம் “""எனக்கு சொந்த ஊர் உத்திராஞ்சல் மாநிலத்தில் இருக்கும் டேராடூன். என்னை ராதிகா என்றும் துர்க்கா அரோரா என்றும் அழைப்பார்கள். ஆனால் என் உண்மையான இயற்பெயர் உஜ்ஜால சர்மா. என்.டி.திவாரி என் சமூ கத்தை சேர்ந்தவர். அவரிடம் உதவியாள ராக இருந்த ஆரியேந்திர சர்மா மூலம் தான் திவாரி எனக்கு அறிமுகமானார். திவாரி பெண் விஷயத்தில் மோசமானவர். விதவிதமாகப் பெண்களை அனுபவிக்கும் ஆசையும் சபலமும் கொண்டவர். அவர் முதல்முறை உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த போது அவரது மந்திரிசபையில் இருந்த மதுமிதா என்ற பெண்ணிடம் சபலப் பட்டார். ஒரு தடவை முதல்வரான அவர் அமைச்சராக இருந்த மதுமிதா சரிகாவுடன் யாருக்கும் சொல்லாமல் எஸ்கேப் ஆக... உ.பி.மாநிலமே பதட்டமானது. காவல்துறை பலமாகத் தேடியபோதும் யார் கண்ணிலும் சிக்காமல் 10 நாட்களுக்கும் மேலாய் உதவியாளர் ஆரியேந்திர சர்மாவின் ஏற்பாட்டில் எங்கள் டேராடூன் வீட்டில்தான் தங்கியிருந்தார்.

அந்த 10 நாளில் இன்னும் பெண்களை ஏற்பாடு பண்ணித்தருமாறு அவர் கேட்க... நானும் பலரை ஏற்பாடு செய்தேன். திவாரிக்கு குரூப் செக்ஸில் அதீத ஆர்வம். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் கும்மாளம் போடுவார். மதுமிதாவோடு நான் ஏற்பாடு செய்த பெண்களோடும் ஒன்றாய்க் கும்மாளம் அடித்தவர்... இரண்டு மூன்று நாட்களிலேயே... நீயும் எங்களோடு கலந்துகொள் என்று வற்புறுத்தி என்னையும் சம்மதிக்க வைத்தார். இந்த டேராடூன் விசிட்டுக்குப் பின் நான் அவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருத்தியாக ஆகிவிட்டேன்.

வயது ஆக ஆக... அவர் உடல் அதற்கெல்லாம் ஒத்துழைக்க மறுத்தது. இருந்தாலும் ஆசையை அடக்க முடியாத திவாரி தினமும் என்னையும் நான் ஏற்பாடு செய்யும் பெண்களையும் பிறந்தகோலமாக்கி மசாஜ் செய்யச் சொல்வார். ஆந்திர கவர்னரானபோதும் என்னை அங்கே கொண்டுவந்துவிட்டார். அங்கும் அவரின் லீலைகள் தொடர்ந்தது. இந்த நீண்டகால பழக்கத்தில் என்னையும் எனது தோழிகளையும் ஆரியேந்திர சர்மாவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். அதோடு தனக்கு நெருக்கமான சில எம்.பி.க்களுக்கும் எங்களை ஆரியேந்திர சர்மா விருந்து வைத்தார். இத்தனை அர்ப்பணம் செய்தும் திவாரி பணம் எதுவும் தரமாட்டார். அதனால் அரசாங்கக் காரியங்களை பலருக்கும் செய்துகொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

இந்தநிலையில் ராயலசீமா பகுதியில் ஒப்பிலாபுரத்தில் ரெட்டி பிரதர்ஸ் நடத்திவந்த இரும்புச்சுரங்கத்தை டெண்டர் எடுக்க ஒரு தரப்பு என்னை அணுக... அவர்களிடம் ஒரு பெரிய அட்வான்ஸை வாங்கி ஆரியேந்திர சர்மாவிடம் கொடுத்தேன். ஆனால் டெண்டர் கிடைக்கவில்லை. சுப்ரீம்கோர்ட் தடை அது, இது என காரணம் சொன்னார்கள். பணம் கொடுத்த தரப்பு பணத்தைக் கேட்டு நச்சரித்தது. திவாரியோ அலட்டிக்கொள்ளவில்லை. உடனே ஆந்திர காங்கிரஸ் பெண்பிரமுகருக்கும் செக்ஸ் தொடர்பு இருப்பதை மீடியாக்களில் பரப்பி விட்டேன். இதற்கும் திவாரி அசரவில்லை. அவர் எப்போது போனாலும் என் உடம்பிலேயே கவனமாக இருந்தார். வேறுவழியில்லாமல் பிளாக்மெயில் பண்ணி கொடுத்த பணத்தை வாங்கும் முடிவுக்கு வந்த நான்... வழக்கமாக நான் அழைத்துப்போகும் சில பெண்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். அவர்களும் ஒத்துக்கொள்ள... ஒரு சல்லாபப் பொழுதில் திவாரி அதிலேயே மூழ்கியிருந்தபோது அத்தனையையும் அப்பட்டமாகப் படம்பிடித்தேன்.

அவர் வெட்கமில்லாமல் செய்த விஷயங்களையும் அவர் எங்க ளைக் கண்ட இடங்களில் முத்தமிட்டதையும்கூட படம் பிடித்தேன். பிறகு இந்த விஷயத்தை அவரிடம் நான் தெரிவித்து பணம் கேட்டபோது.. கோபமான அவர் என்னைத் தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்ப ஆரம்பித்தார். இதனால்தான் ஆந்திரஜோதி பத்திரிகையை நாடினேன். அவர்கள் தங்கள் டி.வி.யில் ஓரளவு வெளிப்படுத்த முடிந்த காட்சி களை மட்டும் ஒளிபரப்பினார்கள். பணத்தை ஏமாற் றியதால்தான் அவருக்கு இப்படி ஒரு தண்டனை யைக் கொடுத்தேன்''’என்றார் விரிவாகவே.

இவரோடு சி.டி.யில் இருந்த மற்ற பெண்களான லஷ்மி, ரேணு, துர்க்கா ஆகியோர் ""திவாரி வெளி உலகத்துக்குதான் பெரிய மனுசன். கதவைச் சாத்திவிட்டால் அவரைவிட சின்னமனுசன் இல்லை. நாங்கள் எங்கள் தோழிக்காகத்தான் படம் எடுக்க ஒத்துழைச்சோம். ஆனா இப்படி கொலைகாரப் படைகளை எல்லாம் அவர் ஏவுவார்ங்கிறதை நாங்க எதிர்பார்க் கலை''’என்கிறார்கள் கவலையாய்.

ராதிகா மூலம் காண்ட்ராக்டுக்கு முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி.தான் திவாரிக்கு எதிராக இப்படி ராதிகாவை ஏவியிருக்கிறார் என்கிற டாக் ஒரு பக்கம் அடிபட்டாலும்.... சூறாவளியாய்க் கிளம்பிய தெலுங்கானா விவகாரத்தை இரண்டாம் பக்கச் செய்தியாக்கிவிட்டு... ஆந்திரப் பத்திரிகைகளில் முதல்பக்கத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது இந்த கிளுகிளு விவகாரம்.

-பிரகாஷ்
நக்கீரன் 03-01-2010

இளம் பெண்ணுடன் கவர்னர் உல்லாசம்

 தெலுங்கானா விவகாரத்தை மையப்படுத்தி எழுந்திருக்கும் சூறாவளி யால் ஆந்திர மாநிலமே கலவரக் காடாக மாறி.. பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதற் கிடையே ஆந்திர கவர்னர் நாரா யண் தத் திவாரி குறித்த "சீச்சி' ரகப் புகாரும் இன்னொரு பக்கம் பரவி... பரபரப்பை பற்றவைத்துக் கொண் டிருப்பதுதான் லேட்டஸ்ட் நில வரம்.

மத்திய அரசு தெலுங்கானாவை தனி மாநிலமாக ஆக்கப் போவதாக அறிவித்ததும் பின்னர் அப்படியே பல்டியடித்து "ஒருமித்த கருத்து உருவாகும்வரை புதிய மாநிலம் உருவாகாது' என்று மத் திய அமைச்சர் அம்பிகா சோனி மூலம் அறிவிக்க... பழையபடி தெலுங் கானா பகுதியில் மிக மூர்க்கமான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. கலவரத்தில் இறங்கிய பொதுமக்களும் மாணவர்களும் 150-க்கும் மேற்பட்ட பஸ்களை அடித்து நொறுக்கினர். 2 ரயில் நிலையங்கள் தீவைக்கப்பட்டன. எப்போதும் ஜன நெரிசலில் திணரும் திருப்பதி கோயில்... போக்குவரத்து ஸ்தம்பித்ததால் காற்றுவாங்கியது. ஆந்திரா முற்றாக நிலை குலைந்துபோய்க் கிடக்கிறது.

இதற்கிடையே... தெலுங்கானா மாநிலத்தை அமைக்க சந்திரசேகரராவ் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கட்சிகளால் அமைக்கப்பட... இதில் மாநில உள்துறை அமைச்சரான ஜனாரெட்டி தன்னை இணைத்துக் கொண்ட தோடு இதன் துணைத் தலைவராகவும் ஆகி மாநில காங்கிரஸுக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்தக் குழு பந்த், உண்ணா விரதம் என காந்தியவழியில் போராட்ட வியூகங்களை வகுத்தபடியே இருக்கிறது.

தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவரான மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டியை ஆந்திர முதல்வராக்கினால்.. தெலுங்கானாவின் போராட்டச் சூடு தணி யுமா? என யோசிக்கும் மத்திய அரசு... ராஜினாமா முடி வில் இருக்கும் தனது கட்சி எம்.எல்.ஏ.க் களையும் அமைச்சர் களையும் எம்.பி.க் களையும் சமாதானப்படுத்தும் முயற்சியை ஒரு பக்கம் தொடங்கியிருக்கிறது. நிலைமை கட்டுப்படாவிட்டால்... கவர்னர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவையும் பரிசீலனையில் வைத்திருக்கிறது.

அதே சமயம் தற்போது ஆந்திர கவர்னராக இருக்கும் நாராயண் தத் திவாரி மீது தொடர்ந்து எழுந்துவரும் பல்வேறு புகார்களும் மத்திய அரசை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திவாரி உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர். சஞ்சய் காந்தியின் நெருக்கமான விசுவாசியாக அவர் காலத்தில் காட்டிக்கொண்டவர். மிசா காலத்தில் உ.பி.யில் இவர் அமைச்சராக இருந்த போது... விமானத்தில் இருந்து இறங்கிவந்த சஞ்சய் காந்தியின் சூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்து... ஓடிப்போய் அவர் காலடியில் உட்கார்ந்து சூ லேஸைக் கட்டியதால் பலத்த சர்ச்சையில் அப்போது அடிபட்டார். இது தவிர முறையற்ற பல திருமணங்களை செய்து கொண்டதாக இவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இருக்கிறது. இந்த 85 வயதிலும் சபலத்தை விடாதவராக... ஆந்திரா மாநிலமே எரிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் கவர்னர் மாளிகையில் மனம்போன போக்கில் மன்மத லீலைகளில் இறங்கி வசமாக சிக்கிக் கொண்டார்.

கவர்னர் மாளிகையில் வேலை செய்த ராதிகா என்ற இளம்பெண்ணின் கட்டுடலைப் பார்த்து மயங்கிய கவர்னர் திவாரி... தனது பதவியைக் காட்டியும் பரிசுப் பொருட்களை வாரிக்கொடுத்தும் வசப்படுத்தினார். பின்னர் கவர்னர் மாளிகையின் பல்வேறு அறைகளில் அந்தப் பெண்ணுடன் அவர் மன்மத விளையாட்டை நடத்தினார். ஆரம்பத்தில் லாபங்கள் கருதி கவர்னரின் சல்லாப லீலைகளைப் பொறுத் துக்கொண்ட ராதிகா... கவர்னரின் அளவுக்கு மீறிய வேகத்திற்கும் அவர் கையாண்ட பொஸி சன்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். ஒரு கட்டத்தில் ஆங்கில ஆபாசப் படங்களைப் போட்டுக்காட்டி... அதில் வருவது போல் நடந்து கொள்ளும்படி கவர்னர் வற்புறுத்தத் தொடங்க... கவர்னரை தவிர்க்க ஆரம்பித்தார் ராதிகா. ஆனால் ருசிகண்ட பூனையான கவர்னர் ராதிகாவை மிரட்டி தன் ஆசைகளுக்குப் பணிய வைக்க... தப்பிக்க வேறு வழிதெரியாத ராதிகா பிரபல ஏ.பி.என். தொலைக்காட்சியிடம் தஞ்சமடைந்தார். கவர்னர் திவாரிக்கு சூடுகொடுக்க விரும்பிய ஏ.பி.என். தொலைக்காட்சி... ராதிகாவிடமே மைக்ரோ கேமராவையும் கேமரா செல்போனையும் கொடுத்தனுப்பியது. ராதிகா கவர்னருக்குத் தெரியாமல் அந்த கேமராவையும் செல்போனையும் சரியான பொஸிசன்களில் மறைத்து வைத்துவிட்டு காத்திருக்க... வழக்கம்போல் ராதிகாவைக் கண்டு உற்சாகமாக கவர்னர் லீலைகளை ஆரம்பிக்க அத்தனையும் அப்பட்டமாகப் பதிவாகியது.. அந்தக் காட்சிகளை அதிரடியாக ஒளிபரப்ப ஆரம்பித்தது ஏ.பி.என்.

இதைப் பார்த்த ஜனநாயக மாதர் சங்கம், புரட்சிகர பெண்கள் முன்னணி போன்ற பெண்கள் அமைப்புகள் கவர்ன ருக்கு எதிராக கவர்னர் மாளிகையை ஆவேசமாக முற்றுகையிட்டனர்.

இதைக்கண்டு வியர்த்துப்போன கவர்னர் மாளிகை ஆந்திர மாநில ஹை கோர்ட்டில் அவசரமாக முறையிட்டு அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. எனினும் கவர்னர் மாளிகையின் லட்சணத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஆந்திராவும் காறித்துப்பிக் கொண்டிருக்கிறது.

-பிரகாஷ்
நக்கீரன்27-12-2009

இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர்

தனது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், ""யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்'' என்று சொல்ல, ""என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே'' என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே'' என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை.

இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.

எந்த மேடையிலும் பேச்சால் பொறி கிளப்பும் மதுரை ஆதீனம், தன்னுடைய தலைமையுரையில், ""பிறந்தநாள் கொண்டாடும் பெரியவாவை (ஜெயேந்திரர்) இயேசு வடிவத்தில் பார்க்கிறேன். ஏன்னா இயேசு சிவப்பா இருப்பார். இவரும் சிவப்பா இருக்கிறார். இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமா பார்க்கிறேன்'' என மற்ற மதங்களை இழுத்துப்பேசியவர், ஜெயேந்திரர் நூற் றாண்டு வாழ, வந்திருந்தவர்களை கோஷம் போட வைத்தார்.

ஜெயேந்திரர் ஏற்புரை வழங்கவில்லை. அருளுரை வழங்கினார். ""மிருகங்களைப் போல வாழாமல் மனிதர்களாய் வாழவேண்டும்'' என்று அவர் சொன்னது தான் ஹைலைட். விழாவில் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ணமூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார்.

இளையராஜா பேசும்போது, ""இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்க யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க'' என்றவர், மகாபெரியவர் காலத்திலிருந்தே தனக்கு காஞ்சி மடத்துடன் நெருக்கம் இருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, ""எனக்கு இசை தெரியாது. இன்னமும் இசையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என தத்துவார்த்தமாகப் பேசினார்.

திருச்சி நேஷனல் கல்லூரியிலும் சீதாலட்சுமி கல்லூரியிலும் ஜெயேந்திரர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எடைக்கு எடை தங்கம், வெள்ளி எனக் கொடுக்கப்பட்டதால் ரொம்பவும் சந்தோஷத்தில் மிதந்தார் காவி கட்டிய துறவி.

-ஜெ.டி.ஆர்.
நக்கீரன் 24-12-2009

கருவறையில் பெண்களை வசியம் செய்தது எப்படி? கோவில் அர்ச்சகர் -தேவநாதன்,

  னது கருவறை லீலைகளால் அதிரவைத்த தேவநாதனின் பெயர்... உலக மகா அயோக்கியர்களின் பட்டியலில் பரபரப்பாக இடம்பிடித்து... இணையதளங்கள் வரை அடிபட்டுக்கொண்டிருக்கிறது. கோயில் கருவறைப் பக்கம் போகவே பெண்கள்அச்சப்படும் அளவிற்கு... ஒருவித பீதியை உண்டாக்கியிருக்கும் தேவநாதன்...தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான். சிறை அனுபவம் அவனைபதப்படுத்தியிருக்கிறதா...? செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும்மனநிலைக்கு அவன் வந்திருக்கிறானா என்பதை எல்லாம் அறிய அவனை சந்திக்கமுடிவெடுத்தோம்.

காஞ்சிபுரத்தில் தலைகாட்ட பயந்து... தனது சொந்த கிராமமான சீவரத்தில் தங்கியிருக்கும் அவனை பெரும் முயற்சி எடுத்து சந்தித்தோம்.

ஆள் உச்சந்தலை குடுமியை கட் பண்ணிவிட்டு கிராப்பில் டிப்டாப்பாகஇருந்தான். போதாக்குறைக்கு வீரப்பன் மீசை வளர்க்க... முகத்தில் ரோமம்ஒதுக்கியிருந்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாததைக்கண்டு திகைத்த நாம்...

நீ செஞ்சதெல்லாம் தப்புன்னு தோணலையா? என்றோம்.

அலட்சியச் சிரிப்பொன்றை உதிர்த்த அவன் “""லோகத் தில் நடக்காததையா நான்செஞ்சுட்டேன். விடுங்கோ... என்னமோ வழக்குப் போடறாளாம். போட்டு என்னத்தைக்கிழிக்கப்போறா? போலீஸ் போட்ட வழக்கெல்லாம் எனக்கு ஜுஜுபீ. எல்லாத்தையும்உடைச்சிக் காட்டறேன் பாருங்கோ''’என்றான் தெனாவெட்டாகவே.

இப்படியெல்லாம் பேசற தைரியம் உனக்கு எப்படி வந்தது? என்றோம்.

""ஒரு தடவை ஜெயிலுக்குப் போனா... தைரியம் மட்டுமல்ல; உலகத்தில் எதுவும்தப்பில்லைங்கிற ஞானமும் பிறக்கும்''’’-இப்போதும் அவனிடம் அதே அலட்சியசிரிப்பு.

சரி... உன் விருப்பங்களுக்கு எப்படி அந்தப் பெண்கள் உடன்பட்டாங்க?’’-இது நாம்.
""எப்படிங்க பொம்மனாட்டி தானா உடன்படுவா? கனியாததை நாமாதான் கனியவைக்கணும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டெக்னிக்கை பயன்படுத்தவேண்டியிருக்கும். பிரைன்லதான் க்ரைம் இருக்கு. புத்தியைப்பயன்படுத்தணும். எனக்கு அந்த மச் சேஸ்வரர் கோயில்ல ஆரம்பத்துல 175ரூபாதான் சம்பளம் கொடுத்தா. அது கடைசியா 300 வரைதான் உசந்துச்சு. இதுலஎப்படி காலந்தள்ள முடியும்? பார்த்தேன்... பிரதோஷ நாள்ல ஸ்பெஷல் பூஜைபண்றதை பிரபலப்படுத்தினேன். பெண்கள் கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சிது.தட்சணையும் குவிய ஆரம்பிச்சிது. வர்றவா ஒவ்வொருத்தரையும் கவனிப்பேன்.சின்னதா சிரிச்சி... க்ஷேமம் விசாரிச்சி... அவாளுக்கு ஆதரவா ரெண்டுவார்த்தை பேசுவேன். உடனே அவா நம்மோட ஆறுதலான பேச்சுக்காகவே கஸ்டமராஆய்டுவா. அப்புறம் அவாக்கிட்ட பரிகார பூஜை.. அந்த பூஜை இந்த பூஜைன்னுஎதையாவது சொல்லி... வசூலை அதிகமாக்கிக்குவேன். இப்படி புத்திய யூஸ்பண்ணி... வருமானத்தைப் பெருக்கின்டேன்''’என்றான் ஆர்வமாக.

சரி! சரி...! குடும்பப் பெண்களைக்கூட எப்படி வசியம் பண்ணினே?’என்றோம்அவனது டெக்னிக்கை பெண்கள் எச்சரிக்கை யாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றஎண்ணத்தில்.

குபீரென உற்சாகமான தேவநாதன், ""எடுத்ததுமே லேடீஸ்கிட்ட நான்வழிஞ்சிடமாட்டேன். கள்ளங்கபடமில்லாத சிரிப்பை மட்டும் முதல்ல வீசுவேன். அப்பதான் நம்பிக்கையா நெருங்குவாங்க. அப்புறம் ஆறுதலா அக்கறையாப் பேசி...உங்க பிரச்சினையை கண்டிப்பா பகவான் தீர்ப்பான்னு சொல்வேன். அந்தவார்த்தையைக் கேட்டதும் சிலிர்த்துப் போவாங்க. சிலபேர்... கண்ணீரோட அவங்கபிரச்சினைகளைச் சொல்லுவாங்க. அப்ப அவங்களுக்குப் பரிகார பூஜைகளைச் சொல்லிஅதை நடத்திக்கொடுப்பேன். அவங்க நட்பானதும் இடையிடையே அவங்களை வர்ணிக்கவும்தயங்கமாட்டேன்.

முதல்ல என்கிட்ட விழுந்தது தாராபாய்தான். ஆத்துக்காரர் லெக்சரர்.பாக்கும்போதெல்லாம் பெருமூச்சு விட்டு.. ரம்பை... திலோத்தமையெல்லாம்தோத்துப்போய்ட்டாளுகன்னு வர்ணிப்பேன். இதிலேயே பாதி கிறங்கிப்போய்ட்டா.ஆனாலும் தொடவிடலை. ஒருநாள் ஹன்ஸ் புகையிலையை உருட்டி.. இது ஸ்பெஷல்பிரசாதம்னு கொடுத்தேன். வாயில் போட்டதும் கிறுகிறுன்னு வருதுன்னு கீழேஉக்கார்ந்துட்டா... அப்படியே கைத்தாங்கலா தோளில் சாய்ச்சிக்கிட்டுகருவறைக்குள் கொண்டுபோய்ட்டேன். செல்போனால் படமும் எடுத்தேன்.இதைக்காட்டியே பலதடவை பல இடத்துக்கும் கூட்டிட்டுப்போனேன்.

அடுத்து விழுந்தது கலா ராணி. புருஷன்காரருக்கு சுக வீனம்.சொல்லிக்குறைபட்டுக் கிட்டா. கோயில் கருவறையில் உறவு வச்சுண்டா.. தோஷமெல்லாம் நீங்கும்னு சொன்னேன். தயங்கின கலாவுக்கும் வழக் கம்போல புகையிலைஉருண்டை கொடுத்தேன்.

அப்புறம் சிவகாமிங்கிற அபிதா. கல்யாணமாகலைங்கிற ஏக்கத் தில் கோயிலுக்குவருவா. ஒருநாள் அவளைக்கூப்பிட்டு உன்னை ரெண்டா வதா தொடுறவந்தான் உனக்குப்புருஷனா ஆவான்னு சொன்னேன். ஐய்யய்யோன்னு திகைச்சுப்போய் நின்னவகிட்ட உன்னைஇதுவரை யாராவது தொட்டிருக்காளான்னு கேட் டேன். ச்சே... இல்லைன்னு கூச்சப்பட்டா. ஒருத்தன் தொட்டாத்தான் ரெண்டாவதா புருஷன்காரன் வாய்ப் பான்னுதொட்டேன். அதுக்கு அடுத்து... ராஜம்பேட்டை வள்ளி. புருஷனுடன் சச்சரவுன்னுகோயிலுக்கு வந்தா. பரிகார பூஜையை கருவறைக்குள் வந்து பண்ணுன்னுகூட்டிட்டுப்போய் ஹன்ஸ் உருட்டிக் கொடுத்தேன். இப்படி ஏகப்பட்ட பேரை ஆண்டுஅனுபவிச்சாச்சு'' என்றான் தன் சீச்சீ அனுபவங்களுடன்.

சரி... அவங்களை அதோட விடாம ஏன் போட்டோவெல்லாம் எடுத்தே?’என்றோம் மண்டிவந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு.

அவனோ ""சின்னவயசில் இருந்தே அந்த மாதிரி படம் பார்ப்பேன். அதில் ஒருவிதகிக் இருக்கு. பொதுவா ஒரு பொண்ணு மேல ஏற்படும் ஆசை ஒரு தடவையோடதீர்ந்துடாது. திரும்பத் திரும்ப பாக்கணும்... அடையணும்னு தோணும். அந்தஆசைக்காகத்தான் படம் எடுத்தேன். ஆனா அப்படி எடுத்த படம்..திரும்பத்திரும்ப அவாளை இஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம் கூப்பிட வசதியாஇருந்தது''’என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

-பிரகாஷ்