வியாழன்

செக்ஸ் ஜோதிடர் வீட்டில் சோதனை: சொகுசு படுக்கை வசதியுடன் ரகசிய அறை கண்டுபிடிப்பு; பெண்ணை வைத்து ஆபாச படம் எடுத்தாரா?

கோவை செல்வபுரம் சி.வி.ஜி. நகரில் ஜோதிடம் மற்றும் சித்த மருத்துவம் செய்வதாக கூறி பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற செக்ஸ் ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை கோவை மாநகர போலீசார் அதிரடி யாக கைது செய்தனர்.

போலீஸ் கமிஷனர் சைலேந் திரபாபு உத்தரவின் பேரில், வி.டி.ஈஸ்வரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதவி கமிஷனர் பாலாஜி சரவணன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கிற்கு தேவையாக பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சுமார் 15 ஆபாச சி.டி.க்கள் ஒரே மாதிரி இருந்தன.

அவற்றின் மேல் “லவ் பெயின்” (காதல் வலி) என்று அச்சிடப்பட்டிருந்தது. அவற்றில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந் தது. உணர்ச்சியை தூண்டும் பாடல்களும் பதிவு செய்யப் பட்டிருந்தது. இதனை வி.டி.ஈஸ்வரனே படமாக்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அவரது வீட்டில் ஈஸ்வரன் தன்னை காணவரும் பெண்களை சந்திப்பதற்கு ரகசிய அறையை வைத்திருப்பதாக பெண்கள் கூறியிருந்தனர். முதலில் போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது செக்ஸ் ஜோதிடரின் ரகசிய அறையை கண்டு பிடிக்க முடியவில்லை. அவரது வீட்டின் ஒரு பகுதியில் தான் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அதில் முகப்பில் வரவேற்பையும் அதனை யொட்டி ஜோதிடம் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்க ஒரு சிறிய அறையும் உள்ளது. வரவேற்பறையில் இருந்து சிறு அறைக்குள் நுழைந்ததும் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொள்ளும் பழக்கத்தை ஈஸ்வரன் வழக்கமாக கொண்டுள்ளார்.

அங்கு வைத்து பெண்களிடம் ஆபாசமாக பாலுணர்வை தூண்டும் விதமாக பேசி தன் வலையில் விழவைப்பார். அந்த பெண்கள் மயங்கிய தும் அவர்களை அங்கிருந்து ரகசிய அறைக்குள் அழைத்து செல்வார். அங்கு சிகப்பு கம்பள விரிப்பில் சொகுசு படுக்கை உள்ளது. அதில் வைத்து யோகா கற்று தருவதாக கூறி பெண்களுடன் உல்லாசமாக இருப்பார் என்று போலீசாரிடம் சில பெண்கள் கூறினர். அதன்படி சோதனை நடத்திய போலீசார் அந்த அறையை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

சொகுசு படுக்கை வசதியுடன் காணப்பட்ட அந்த அறையில் டி.வி. மற்றும் சி.டி. பிளேயர் போன்றவை இருந்தது. அங்கு வைத்து ஈஸ்வரன் ஆபாச படம் எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இதுபற்றிய முழுமையான விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வி.டி.ஈஸ்வரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
Source:http://www.maalaimalar.com/2011/02/02202809/kovai-jothidar-house-ride.html