
தாராபுரம் அருகே ஜோதிடர் வேடத்தில் வந்த ஆசாமி, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி நகையுடன் தப்பினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (68). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. நேற்று காலை தங்கவேல் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனலட்சுமி தனியாக இருந்தார்.
அப்போது, ஜோதிடரைப் போல வந்த ஒரு ஆசாமி வீட்டு கதவை தட்டியுள்ளார். தனலட்சுமியும் ஜோதிடம் பார்க்கலாம் என்ற ஆசையில் அவரை வீட்டினுள் அழைத்து சென்றார். தனலட்சுமியின் கைரேகை, ஜாதகத்தை வாங்கிப் பார்த்த அந்த ஆசாமி, ‘இப்போது உங்களுக்கு நேரம் சரியில்லை; எந்த செயலை செய்தாலும் யோசித்து செய்யுங்கள்‘ என ஆலோசனை கூறியுள்ளார். பரிகாரமாகவும் சிலவற்றை கூறினார்.
இதனால், தனலட்சுமி குழப்பமடைந்தார். அப்போது அந்த ஆசாமி, ‘குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்’ என கேட்டதால், தனலட்சுமி தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார். தண்ணீரை குடித்துவிட்டு, ‘அம்மா கவனமாக இருங்கள்’ என கூறிச்சென்றுள்ளார்.
ஜோதிடர் சென்ற சிறிதுநேரம் கழித்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மாயமாகி இருந்தது. தண்ணீர் கொண்டுவர சென்றபோது ஜோதிடர், எடுத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.dinakaran.com
என்ன கொடுமை சார் இது
பதிலளிநீக்குநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
பதிலளிநீக்குநன்றி நண்பரே உங்களின் வேண்டுகோளை ஏற்று மாற்றி விட்டேன்
பதிலளிநீக்கு